திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கபுதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சி
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, காயிதேமில்லத் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சி பாறையடிதெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தலைவராக கணேஷ்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் உதவித்தலைவர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் அரவிந்தன் வெற்றி பெற்றார். மேலும் செயலாளராக பாலனும், இணை செயலாளராக பழனியப்பனும், பொருளாளராக ரவிச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதுமட்டுமல்லாமல் 20 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story