மேலூரில் சித்திரை திருவிழா: விரதம் இருந்த பக்தர்கள் சாமியாட்டம்
மேலூரில் சித்திரை திருவிழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் சாமியாட்டம் ஆடினர்
மதுரை
மேலூர்,
சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர்கோவிலில் கொடியேற்ற நாளிலிருந்து அழகர் ஆற்றில் இறங்கி அழகர் கோவிலுக்கு வரும் வரை 45 நாட்கள் கொட்டகுடி பல்லவராயன்பட்டி மக்கள் கடுமையான விரதம் இருந்து வருகின்றனர். கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றில் இறங்குவதையொட்டி விரதமிருந்த பக்தர்கள் திரிதரித்து சாமியாட்டம் ஆடினர். கொட்டகுடி கற்குடை அய்யனார் குலதெய்வம், மேலூர் பல்லவராயன்பட்டி வல்லாம் பிச்சி அம்மன், மூன்று கரை சாமியாடிகள் சாமியாட்டம் ஆடினர். அய்யனாருக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் திருவிழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பொங்கலை உருண்டையாக உருட்டி பிரசாதமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story