கந்துவட்டி புகாரில் பைனான்ஸ் அதிபர் கைது


கந்துவட்டி புகாரில் பைனான்ஸ் அதிபர் கைது
x

கந்துவட்டி புகாரில் பைனான்ஸ் அதிபர் கைது

கோயம்புத்தூர்

துடியலூர்

கந்துவட்டி புகாரில் பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

ரூ.5 லட்சம் கடன்

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மாணிக்கம் கவுண்டர் மில்ஸ் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையம் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் (39) என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

மாதந்தோறும் அவர் சதீஷ்குமாரிடம் வட்டி பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாததால் மாணிக்கத்தால் சரியாக வட்டி பணத்தை ெசலுத்த முடியவில்லை. ஆனால் சதீஷ்குமார் வட்டி பணத்தை கேட்டு மாணிக்கத்திற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கைது

இந்த தொல்லையை தாங்க முடியாமல் மாணிக்கம் துடியலூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரில் சதீஷ்குமார் கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுக்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் பெயரில் போலீசார் கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் கணக்கில் வராமல் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது.

கந்து வட்டிக்கு கொடுக்கும் நோக்கில் அந்த பணத்தை அவர் வைத்திருந்ததால், அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, சதிஷ்குமாரை கைதுசெய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story