நிதி நிறுவன அதிபர் கிணற்றில் தவறி விழுந்து சாவு


நிதி நிறுவன அதிபர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 1 Jun 2023 11:23 PM IST (Updated: 2 Jun 2023 11:49 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே திருவிழாவிற்கு வந்த நிதி நிறுவன அதிபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கரூர்

நிதி நிறுவன அதிபர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சூரப்ப நாயக்கனூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் விஜய் (வயது 23). இவர் காரைக்குடியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவா் கடந்த 28-ந் தேதி கோவில் திருவிழாவிற்காக காரைக்குடியில் இருந்து சூரப்ப நாயக்கனூருக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்ர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் விஜயை காணவில்லை. இந்தநிலையில் சூரப்ப நாயக்கனூரில் தனியாருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள 2 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விஜய் இறந்த கிடந்தார்.

சாவு

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விஜயின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விஜய் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா வந்த நிதி நிறுவன அதிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story