நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு நிதியுதவி


நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு நிதியுதவி
x

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு ராஜா எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் நவநீதகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான சண்முகச்சாமி- வள்ளியம்மாள் தம்பதியினரின் மகன் முருகராஜ். இவர் நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளதை தொடர்ந்து முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா, அந்த மாணவரின் கல்வி செலவுக்காக ரூ.10 ஆயிரமும், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ரூ.10 ஆயிரமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் ரூ.5 ஆயிரமும் வழங்கினர். மேலும் வரும் காலங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


Next Story