Normal
நிதியியல் விழிப்புணர்வு முகாம்

வல்லியம் கிராமத்தில் நிதியியல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கடலூர்
விருத்தாசலம்,
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கருவேப்பிலங்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வல்லியம் கிராமத்தில் நிதியியல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் வங்கியின் முதன்மை மேலாளர் ரம்யா கலந்து கொண்டு பிரதான் மந்திரி இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருந்து இறந்துபோன பயனாளியின் வாரிசுதாரருக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டது. முகாமில் ஷாமலி, செல்வகுமார் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி கிளையின் வணிக தொடர்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரதீப் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






