நிதி நிறுவன ஊழியர் தற்கொலை


நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Sept 2023 1:00 AM IST (Updated: 1 Sept 2023 10:14 PM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன ஊழியர் தற்கொலை

கோயம்புத்தூர்

பேரூர்

கோவையை அடுத்த பேரூர் அருகே மாதம்பட்டி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுரேந்தர் (வயது 28). பி.எஸ்சி பட்டதாரி. இவர் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில், காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனால் அந்த இளம்பெண் சுரேந்தருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் சுரேந்தர் வேலைக்கு செல்லாமல் வேதனையுடன் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று சுரேந்தர் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் சுரேந்தரின் செல்போ னை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில், அவர், காதலியிடம் 30 நிமிடங்கள் பேசியதும், பின்னர் உன்னை வெறுக்கிறேன் எனக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேந்தரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story