சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை


சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை
x

சேலம் சிறையில் சாராய ஊறலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

எடுக்ககாந்தி ஜெயந்தியையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காந்தி சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவரிடம், சேலம் சிறையில் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ``அதுதான் பறிமுதல் செய்துவிட்டோமே. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம். யாரேனும் தவறு செய்தால் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம். நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தான் தவறு'' என்றார்.


Next Story