விதிமுறைகளை மீறி இயக்கிய 5 வாகனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


விதிமுறைகளை மீறி இயக்கிய 5 வாகனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் மற்றும் கபிலர்மலை பகுதிகளில் நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகன், உமா மகேஸ்வரி, பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வாகன வரி செலுத்தாமலும், தகுதிச்சான்றை புதுப்பிக்காமலும் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் அதிகாரிகளிடம் சிக்கின. அவற்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story