போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்திருந்த 4 பேருக்கு அபராதம்
போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் வைத்திருந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் உரிய அனுமதியின்றி சிலர் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் இது போன்ற தற்காலிக கடைகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதார பிரிவு அதிகாரிகளை திடீர் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் செய்த 4 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து வியாபாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு கடைகளை நடத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.