சேவை குறைபாடு: தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


சேவை குறைபாடு:  தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு அபராதம்  நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

சேவை குறைபாடு: தனியார் கியாஸ் நிறுவனத்திற்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் சசிகலா. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் கியாஸ் இணைப்பு வேண்டி கடந்த 6.5.2019 அன்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து கியாஸ் நிறுவனத்தினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவரது வீட்டிற்கு கியாஸ் சிலிண்டரை கொண்டு சென்ற பணியாளர் சிலிண்டருக்கு ரூ.800 கேட்டு உள்ளார். அதற்கு சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறி உள்ளார். அதற்கு பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தர முடியும். இல்லையெனில் நான் திருப்பி எடுத்து போகிறேன். உன்னால் முடிந்ததை செய்துகொள் என்று கூறி வினியோக புத்தகத்தில் உள்ள பதிவை அடித்து கொடுத்து விட்டு சிலிண்டரை எடுத்து சென்று விட்டார்.

இந்த சேவை குறைபாடு தொடர்பாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தின் செயலாளர் சுப்பராயன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் தனியார் கியாஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவு தொகை ரூ.5 ஆயிரம், நுகர்வோர் நலநிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.


Next Story