ஊட்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஓட்டலுக்கு அபராதம்
ஊட்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகம் செய்யப்படுவதாக நகராட்சி துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் லோயர் பஜார் பகுதியில் இருந்த அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் ஓட்டலின் பின்புறம் சுகாதாரமற்ற முறையில் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது.
மேலும் எலி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி அதிகாரிகள் அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதே நிலை தொடர்ந்தால் ஓட்டல் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story