அதிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம்
தென்காசியில் அதிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று தென்காசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எம்.மணி தலைமையில் போலீசார் தென்காசியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள் பொருத்திய மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அபராதம் விதித்தனர். சிலர் சைலன்ஸர்களை கழற்றி கொடுத்துவிட்டு சென்றனர். மேலும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முதியவர்கள், பெண்கள் போன்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
Related Tags :
Next Story