தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம்
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் மாடுகளை வளர்ப்பவர்கள் பகல் நேரங்களில் தெருக்களில் திரிய விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை பிடித்து வந்து பேரூராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர். பின்னர் மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து அனைத்து மாடுகளுக்கும் சுமார் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதிகளில் தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதக்கப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story