தர்மபுரி அருகேவிவசாயி வீட்டில் தீப்பிடித்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
தர்மபுரி
தர்மபுரி அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 53). விவசாயி. மாற்றுத்திறனாளியான இவர் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அதேபோல் மாற்றுத்திறனாளி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story