தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து;ரூ.1½ கோடி பொருட்கள் எரிந்து சேதம்
மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1½ கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
ஏற்றுமதி வாய்ப்பு
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தேங்காய் மட்டைகளிலிருந்து தென்னை நார் மற்றும் பித்துக்கட்டி உற்பத்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சமீப காலங்களாக ஏற்றுமதி வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல தென்னை நார் தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விற்பனை வாய்ப்புகளை எதிர்பார்த்து, உற்பத்தி செய்த தென்னை நார்கள் மற்றும் பித்துக்கட்டிகளை இருப்பு வைத்து காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
புகை மூட்டம்
மடத்துக்குளத்தையடுத்த கொழுமம் குப்பம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சி பலனளிக்காத நிலையில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடுமலை மற்றும் பழனி பகுதியிலிருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து;
ரூ.1½ கோடி பொருட்கள் எரிந்து சேதம்தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து;
ரூ.1½ கோடி பொருட்கள் எரிந்து சேதம்
கொழுந்து விட்டு எரிந்த தீயால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் ரூ.1½ கோடி மதிப்பிலான எந்திரங்கள், இருப்பு வைக்கும் கிடங்கு மற்றும் தென்னை மட்டைகள், நார்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.