சேந்தமங்கலம் அரசு கல்லூரியில்தீயணைப்பு துறை செயல்விளக்க நிகழ்ச்சி


சேந்தமங்கலம் அரசு கல்லூரியில்தீயணைப்பு துறை செயல்விளக்க நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 July 2023 12:30 AM IST (Updated: 29 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு கணவாய் மேட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாரதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராசிபுரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பலகார ராமசாமி கலந்து கொண்டு தீத்தடுப்பு முறைகள் மற்றும் நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதுகாப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். அவருடன் தீயணைப்பு ஓட்டுனர் பரமேஸ்வரன், தீயணைப்பு பணியாளர் வேடியப்பன் ஆகியோர் பங்கேற்று செயல் விளக்கத்திற்கு உதவினர். இதில் செந்தில்குமரன், இணை பேராசிரியர் ரவி, உடற்கல்வி இயக்குனர், துறைத்தலைவர்கள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திலீப், பிரபு, கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story