இருசக்கர வாகன ஷோரூமில் திடீர் தீ விபத்து


இருசக்கர வாகன ஷோரூமில் திடீர் தீ விபத்து
x

அரூரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

தர்மபுரி

அரூர்:

அரூரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இருசக்கர வாகன ஷோரூம்

தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க. நகர் பகுதியில் இருசக்கர வாகன ஷோரூம் அமைந்துள்ளது. இந்த ஷோரூமில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இந்த ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ பரவியது. பின்னர் இந்த ஷோரூம் அமைந்துள்ள 3 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் தீ பரவ தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஷோரூமிற்கு மேல்மாடியில் சிக்கியிருந்த பணியாளர்கள் சிலரை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

வாகனங்கள் சேதம்

இந்த தீ விபத்தில் ஷோரூமில் இருந்த இருசக்கர வாகனங்கள், பேட்டரிகள், இருசக்கர வாகன உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன. சேதமதிப்பு உடனடியாக தெரியவரவில்லை. இந்த தீ விபத்து காரணமாக அரூர்- சேலம் பிரதான சாலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அரூர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story