வெள்ளோடு அருகே கரும்பு தோட்டங்களில் தீ விபத்து

வெள்ளோடு அருகே கரும்பு தோட்டங்களில் தீ விபத்து
x

வெள்ளோடு அருகே கரும்பு தோட்டங்களில் தீ விபத்து

ஈரோடு

பெருந்துறை

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள கே.கே.வலசு பகுதியில் நேற்று முன்தினம் 2 கரும்பு தோட்டங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

Related Tags :
Next Story