பாலக்கோடு அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து


பாலக்கோடு அருகே  கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள சென்னப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 42). இவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தார். இதற்கிடையே கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று காலை திடீரென கரும்பு தோட்டத்தில் இருந்து கரும்புகை எழும்பியது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் உடனடியாக கரும்பு தோட்டத்துக்கு சென்று தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் கரும்பு தோட்டத்தில் தீ மளமளவென பிடித்து எரிந்தது.

இதையடுத்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story