சென்னிமலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து- தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


சென்னிமலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து- தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

சென்னிமலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதியில் தீ

சென்னிமலை காங்கேயம் ரோட்டில் கணுவாய் என்ற இடத்தில் வனப்பகுதி உள்ளது. தற்போது இந்த வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புல்கள் வறண்டு காணப்படுகிறது. சமீபகாலமாக இங்கு வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

உடனே சென்னிமலையில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சென்னிமலை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணுவாய் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்தனர்.

கண்காணிக்க வேண்டும்

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் காங்கேயம் ரோட்டில் உள்ள வனப்பகுதியில் வறண்டு கிடக்கும் செடி, கொடிகளில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். மின் ஒயரில் இருந்து கம்பி எடுப்பதற்காக யாரோ ஒயரில் தீ வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி கூறுகையில், 'சென்னிமலை வனப்பகுதியில் பல இடங்களில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாது. அந்த இடங்களிலும் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீயணைப்பு வீரர்கள் அங்கு இலை, தழைகளை கொண்டு தீயை அணைத்தனர். அதனால் வனப்பகுதியில் சுற்றி தெரியும் மர்ம நபர்களை பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்' என்றார்.

பொதுமக்கள்

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'சென்னிமலை வனப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது தான் அதிக அளவில் தீ பிடிக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதை யாரோ சிலர் வேண்டுமென்றே செய்வது போல் தெரிகிறது. அதனால் வனப்பகுதியில் சுற்றி திரிபவர்களை வனத்துறையினர் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.



Related Tags :
Next Story