மோகனூர் அருகே சாலையோர குப்பை கிடங்கில் திடீர் தீ
நாமக்கல்
மோகனூர்:
மோகனூர் அருகே பேட்டப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சர்க்கரை ஆலை செல்லும் சாலையோரம் குப்பை கிடங்கு உள்ளது. இதில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மேலும் பரவி அங்கிருந்த புதர்கள், முட்செடிகளில் பற்றியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story