இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து


இருசக்கர வாகன பழுதுபார்க்கும்  கடையில் தீ விபத்து
x

கிருஷ்ணகிரியில், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேமடைந்தன.

வாகன பழுதுபார்க்கும் கடை

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பாஸ்கர் (வயது 45). இவர் பெங்களூரு சாலையில் ராஜா தியேட்டர் பின்புறம் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இங்கு இருசக்கர வாகன உதிரி பாகங்கள், ஆயில் உள்ளிட்டவைகளை அவர் வைத்து இருந்தார்.

மேலும் வாகன பழுது பார்ப்புக்காக வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு பாஸ்கர் வீட்டிற்கு சென்றார். இரவு, அவரது கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கடையில் தீப்பிடித்து மளமளவென தீ கடை முழுவதும் பரவியது.

ரூ.10 லட்சம் சேதம்

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள், மோட்டார்சைக்கிள்கள், கம்ப்யூட்டர், ஆயில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தீவிபத்துக்கான காரணம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story