காட்டுமன்னார்கோவிலில் தீ விபத்து 6 கூரை வீடுகள் எரிந்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்


காட்டுமன்னார்கோவிலில் தீ விபத்து    6 கூரை வீடுகள் எரிந்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதம்
x

காட்டுமன்னார்கோவிலில் நடந்த தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து ரூ.25 லட்சம் பொருட்கள் சேதமானது.

கடலூர்


காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் முகமதியார் தெருவை சேர்ந்தவர் ஆசாத். இவரது கூரை வீடு நேற்று மதியம் 2 மணிக்கு திடீரென தீ பற்றி எரிந்தது. மளமளவென பரவிய தீ அருகில் இருந்த அர்சத், அஷ்ரப், அன்வர், அப்பாஸ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் பற்றி எரிந்தது.

இதுபற்றி பேரூராட்சி மன்ற தலைவர் கணேச மூர்த்தி, காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில், விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ரூ.25 லட்சம் சேதம்

இதில் 6 வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. விபத்து பற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் நேரில் வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story