மாற்றுத்திறனாளி வீட்டில் தீ விபத்து


மாற்றுத்திறனாளி வீட்டில் தீ விபத்து
x

மாற்றுத்திறனாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோகர் மகன் மணிகண்டன் (வயது 19). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதில் அவரது வீட்டில் வைத்திருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி புத்தகம், துணிமணிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story