புதுக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து


புதுக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து
x

புதுக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கு திருக்கட்டளை செல்லும் சாலையில் உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் கோடைகாலத்தில் அவ்வப்போது தீப்பிடிப்பது வழக்கம். மர்ம ஆசாமிகள் சிகரெட் பிடித்து நெருப்பை குப்பை மேட்டில் வீசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தீ முழுமையாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


Next Story