தனியார் பஸ்சில் தீடீர் தீ விபத்து


தனியார் பஸ்சில் தீடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 10 May 2023 1:30 AM IST (Updated: 10 May 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பஸ்சில் தீவிபத்து ஏற்பட்டு புகை மண்டலமானது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கோயம்புத்தூர்

தனியார் பஸ்சில் தீவிபத்து ஏற்பட்டு புகை மண்டலமானது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தனியார் பஸ்சில் புகை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அந்த நேற்று காலை 40- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அன்னூர் பட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்ட பம் அருகே வந்தபோது அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்ைச உடனடியாக நிறுத்தினர்.

இதனால் பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சைவிட்டு இறங்கினர். அப்போது பஸ்சில் இருந்து புகை அதிகமாக வெளி யேறி அந்த பகுதியே புகைமண்டலமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்களது உடைமைகளை கூட பொருட்படுத் தாமல் ஓட்டம் பிடித்தனர்.

தீ அணைப்பு

இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் இருந்த பயணிகளின் உடைமைகள் எடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு பயணிகள் மாற்று பஸ்சில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

பஸ்சில் இருந்த சைலன்சரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரண மாக புகை வெளியேறியதால் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில் பஸ்சின் சைலன்ஸரில் இருந்து ஆயில் கசிவு ஆகிய தால் புகை வந்ததாகவும் பெரிய அளவிலான தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.


Next Story