தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து


தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 4 Aug 2023 1:15 AM IST (Updated: 4 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான நாப்கின் மற்றும் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று அந்த தொழிற்சாலையில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.


Next Story