பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து


பஞ்சு மில்லில் பயங்கர தீ  விபத்து
x

வெள்ளகோவில் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர்

திருப்பூர்

வெள்ளகோவில் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

பஞ்சு மில்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாய்கன்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.45 மணி அளவில் நூற்பாலையில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் நூற்பாலை தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்றும், காற்று வெளியேற அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியே தீ பரவியதும் தெரியவந்தது.

எந்திரங்கள் சேதம்

இந்த தீ விபத்தின் காரணமாக எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், நூல் ஆலையின் வெளிபக்க சுவர் என

பெரும்பாலான சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வௌ்ளகோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



Next Story