Normal
இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
சங்கராபுரத்தில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் பூட்டை சாலையை சேர்ந்தவர் கோபால் மகன் மணிகண்டன இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை மணிகண்டன் கடையில் இருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story