கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ


கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ
x

ஆத்தூர் அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தெற்கு காடு பகுதியில் ஜெயபிரகாஷ் (வயது 45) என்பவர் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். நேற்று இந்த ஆலையில் மதியம் கயிறுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மள மளவென பரவி வேகமாக பரவ தொடங்கியது. இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சேதம் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story