ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து
ஏ.சி., பிரிட்ஜ் பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் அடப்பன்வயலை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மேல 2-ம் வீதியல் ஏ.சி., பிரிட்ஜ் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இந்த கடையை வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று அதிகாலையில் அந்த கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story