கூரை வீடு தீயில் எரிந்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் சேதம்
கூரை வீடு தீயில் எரிந்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் சேதம் அடைந்தன.
கும்பகோணம் பழைய பெரிய தம்பி நகரில் வசிப்பவர் தங்கராஜ். இவருடைய வீட்டுக்கு நேற்று அவருடைய உறவினர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த மரத்தூள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி கூரை வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் வீட்டின் உரிமையாளர் தங்கராஜுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அரசின் நிவாரண உதவி பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். வீடு தீப்பற்றி எரிந்ததற்கு கியாஸ் கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.