தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து


தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து
x

சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பேபிராணி (வயது 45). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி பேக்கேஜிங் ஆலையில் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து தீக்குச்சிகளை வாங்கி தீப்பெட்டி பண்டல்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம் போல் ஆலையின் உரிமையாளர் ஆலையை திறந்து பணியை தொடங்குவதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தீக்குச்சி மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த அறையில் மூட்டைகள் சரிந்து விழுந்து தீக்குச்சிகள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 40 தீக்குச்சி மூடைகள், 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் 2 எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விைரந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தின் போது வேலையாட்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story