பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் தீ விபத்து
காவேரிப்பாக்கம் அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
ராணிப்பேட்டை
நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஈராளம்சேரி கிராமத்தில் சென்னையை சேர்ந்த தாட்சாயினி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கம்பெனி இயங்கிவருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். நேற்று மாலை கம்பெனி வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்ட பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story