எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து
எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் வீட்டில் தீ விபத்து ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த ஆரியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் காணை மெயின்ரோட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கூரை வீட்டில் நேற்று மாலை திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனே இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதில் வீட்டினுள் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
Related Tags :
Next Story