நகராட்சி குப்பை கிடங்கில் தீ
தென்காசியில் நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்தது
தென்காசி
தென்காசி:
தென்காசி தலைமை தபால் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிலையம் மற்றும் மறுசுழற்சி நிலையம் உள்ளது. நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை இங்குள்ள கிடங்கில் சேமித்து வைக்கிறார்கள். பின்னர் அதனை மறுசுழற்சி செய்து கொடுக்கிறார்கள்.
இந்த நிலையத்தில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து அவசர தொலைபேசி எண் 100-க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தென்காசி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்திற்கு காரணம் மின்கசிவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story