திருச்சியில் கருவாட்டு குடோனில் தீவிபத்து - ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
திருச்சியில் கருவாட்டு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
மலைக்கோட்டை,
திருச்சி கோட்டை பகுதியில் இபி ரோடு அருகில் உள்ள கருவாட்டு பேட்டையில் கருவாடு மொத்த வியாபாரகள் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் இன்று இரவு 2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராட்டி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள கருவாடுகளும், ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தளவாட பொருட்களும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story