மதுக்கூர் குப்பை கிடங்கில் தீவிபத்து


மதுக்கூர் குப்பை கிடங்கில் தீவிபத்து
x

மதுக்கூர் குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர்

மதுக்கூர்:

மதுக்கூரில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தீவிபத்து ஏற்பட்ட குப்பை கிடங்கை மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர்.


Next Story