பூட்டியிருந்த வீட்டில் திடீர் தீ


பூட்டியிருந்த வீட்டில் திடீர் தீ
x

காட்பாடியில் பூட்டியிருந்த வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் எரிந்து நாசமாயின.

வேலூர்

பழைய காட்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமணி (வயது 67). இவருடைய மகன் பிரகாஷ். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் பகல் 3 மணி அளவில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. அதனை பார்த்த உறவினர் ஒருவர் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் வைத்திருந்த நகை, பணம், மின் சாதன பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கு காரணம் மின்கசிவா என்பது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story