தீத்தொண்டு நாள் வார விழா
தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பவர்க்ரீட் கார்பரேஷனுடன் இணைந்து தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. அதனையொட்டி பள்ளி குழந்தைகளுக்கிடையே தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்காக தீ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். பரிசு பெற்ற மாணவிகளை செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சேர்மன் குமரேசன், முதல்வர் உஷா குமாரி, துணை முதல்வர் பிரேம் சித்ரா, தீயணைப்புத்துறை அதிகாரி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story