தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிக் குழு வழிகாட்டுதலின்படி தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். விருதுநகர் தீயணைப்பு நிலைய துணை அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் நிலைய தீயணைப்பு துணை அலுவலர் பாலமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்ேகற்றனர். இந்த நிகழ்ச்சியில் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story