தீத்தடுப்பு ஒத்திகை


தீத்தடுப்பு ஒத்திகை
x

தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100 இடங்களில் தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி, வெள்ள தடுப்பு நிகழ்ச்சி ஆகியவை பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார்கள். இதில் சுகாதார துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story