தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையில் இண்டேன் ஆயில் கார்ப்பரேஷன் கியாஸ் நிரப்பும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, ஈரோடு, பெருந்துறை, பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், திருப்பூர், மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வால்பாறை மற்றும் கேரளா மாநிலத்துக்கு லாரி மூலம் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் நேற்று தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முதுநிலை மேலாளர்(ஆலை) சுந்தர் தலைமை தாங்கினார். பின்னர் மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுபோல திடீரென்று அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. மேலும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள் நவீன கருவிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைப்பது போன்று ஒத்திகை பார்த்தனர். மேலும் ஊழியர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி டாக்டர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வது போன்று தத்ரூபமாக ஒத்திகை பார்க்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story