தீ தடுப்பு ஒத்திகை


தீ தடுப்பு ஒத்திகை
x

தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீ தடுப்பு வாரத்தையொட்டி, விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை ேநற்று பயணிகள் முன்பாக விமான நிலைய முனைய வளாகத்தில் நடத்தப்பட்டது. விமான நிலைய தீயணைப்பு துறை சார்பில் விமானங்கள் மற்றும் விமான நிலையத்தில் தீ ஏற்பட்டால் தடுக்கும் முறை குறித்தும், அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும்போது எடுத்து செல்லக்கூடாத தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயல் விளக்கத்தை விமான நிலைய தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

1 More update

Next Story