கள்ளக்குறிச்சியில்3 வீடுகளில் தீ விபத்து


கள்ளக்குறிச்சியில்3 வீடுகளில் தீ விபத்து
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் 3 வீடுகளில் தீ விபத்து நடந்தது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் சிவசக்தி என்பர் வீட்டில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் திடீரென தீ பிடித்தது. இதுப்றி அவர் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

இருப்பினும், ஏ.சி. எந்திரம் மற்றும் கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே போல் ஏமப்பெயர் காலனி பகுதியில் திரிசங்கு, கருப்பன் ஆகிய 2 பேரின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. இது பற்றி கொடுத்த தகவலின் பெயரில் சின்னசேலம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமானது. மேலும் 2 பேரின் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமானது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story