தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து


தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:46 PM GMT)

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சுக்காம்பட்டி சரகத்துக்குட்பட்ட பகுதியில் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு தேங்காய் மட்டைகளை உரித்து மஞ்சிகளாக தயார் செய்து கயிறு திரிப்பதற்கு விற்கப்படுகிறது. சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று காலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்கு தயாராக இருந்த மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாரில் தீப்பிடித்தது.

இதைதொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்தில் ஜெனரேட்டர், கட்டிங் மெஷின் மற்றும் தென்னை நார்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.


Next Story