தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ


தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ
x

வத்திராயிருப்பு அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தேங்காய் நாரில் தீ

வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை தொழிற்சாலைக்கு வெளியில் மலை போல் குவித்து வைத்திருந்த தேங்காய் நார் கழிவுகளில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.

உடனே ெதாழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள், அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் அடங்காததால் உடனடியாக வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிர்சேதம் இல்லை

அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயின் வேகம் அதிகரித்து கொண்டே இருந்தது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீவிபத்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story