தென்னை நார் தொழிற்சாலையில் தீ


தென்னை நார் தொழிற்சாலையில் தீ
x

பட்டிவீரன்பட்டி அருகே, தென்னை நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் முரளி. இவருக்கு, அதே பகுதியில் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அந்த தொழிற்சாலை வளாகத்தில் கயிறு தயாரிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாரில் திடீரென தீப்பற்றியது.

சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு, நிலக்கோட்டை தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு படையினர் ெதரிவித்தனர்.


Next Story