கியாஸ் சிலிண்டரில் தீ; 3 பேர் காயம்


கியாஸ் சிலிண்டரில் தீ; 3 பேர் காயம்
x
தினத்தந்தி 16 April 2023 6:45 PM GMT (Updated: 16 April 2023 6:45 PM GMT)

சங்கராபுரம் அருகே கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ காரணமாக 3 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மனைவி சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் உறவினரான தியாகதுருகத்தை சேர்ந்த துரைராஜ் மனைவி செல்வியுடன் ( 58), கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் தீ சந்திரா, செல்வி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் மீது பரவியது. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயமடைந்த சந்திரா, செல்வி, கண்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். இது பற்றி அறிந்த தாசில்தார் சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.


Next Story